காதலியின் குடும்பத்திற்கே ஸ்கெட்ச்.. தாயை தூக்கிய சைக்கோ காதலன் - அதிர்ச்சி!
ஒருவர் தனது காதலியின் குடும்பத்தை தாக்கியது அதிர்சியை ஏற்படுத்தியுளளது.
காதல்
அமெரிக்காவில் உள்ள லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ், அவரது கணவர் டெட்டி, இவர்களது மகள் ஆம்பர் ரோஸ். இவர் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் என்பவரை சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த அவரது தந்தை டெட்டி அந்த காதலரை அழைத்து விசாரித்தபொழுது, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் ரிக்கர் டெட்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளார், அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்டார்.
கொலை
இந்நிலையில், ரிக்கர் கைது செய்யப்பட்டார், ஆனால் 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் அவர் காதலியின் வீட்டிற்கு சென்றார் அங்கு அவரது தயார் மட்டும் இருந்துள்ளார். அவரை தாக்கி கொலை செய்துள்ளார். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து டெட்டி, "ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.
தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்" என்று கூறியுள்ளார்.