காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - யார் தெரியுமா?
நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது, சினிமா விருது போன்ற பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார்.
தற்போது நடிகை சமந்தாவோடு இவர் இணைந்து நடித்த குஷி திரைப்படம் உருவாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இவர் யாரை காதலிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் இருந்து வருகிறது.
வைரல் ஃபோட்டோ
இவரது திருமண வதந்திகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு "Lots happening but this one’s truly special- announcing soon" இதுகுறித்து அப்டேட் கொடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஒருதரப்பில் திருமண அறிவிப்பாக கூட இருக்கலாம்.. இல்லையென்றால் அடுத்த பட புரோமஷனாக கூட இருக்கலாம் என குழம்பி வருகின்றனர்.