ராஷ்மிகாவுடன் டேட்டிங்கில் விஜய் தேவரகொண்டா - பிரபல நடிகை சொன்ன தகவல்!
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் உறவு குறித்து மறைமுகமாக கூறியுள்ளார் அனன்யா பாண்டே.
விஜய் தேவரகொண்டா
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த போது,
அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுவே இவர்கள் காதல் வதந்தியை சிக்க காரணமாகவும் இருந்தது. மேலும், ராஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா காதலிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்த வண்ணமாக உள்ளது.
டேட்டிங்
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங்கில் இருப்பதாக, 'லிகர்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். இவர்கள் காதல் குறித்த வதந்தி நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில்,
அதனை இருவருமே தொடர்ந்து நிராகரித்து வந்தனர். ஆனால் தற்போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார்.
அனன்யா பாண்டே
விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, அவர் விஜய்யைப் பற்றி கூறி மறைமுகமாக ராஷ்மிகா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.
இருவரும் வெறும் நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் சுற்றுலாவிற்கு ஒரே இடங்களுக்கு சென்றது போன்றவை இவர்கள் காதல் வதந்தி குறித்து வெளியான தகவல்களை வலுக்க செய்தது.
தற்போது இந்த வதந்தியை உறுதி செய்யும் விதமாக அனன்யா பாண்டே, மறைமுகமாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் டேட் செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.