செல்ல பிராணிகளுக்கு dating app; இனி துணை தேடுவது ஈஸி - மருத்துவ மாணவர் புது முயற்சி!

Kerala India
By Swetha May 24, 2024 07:39 AM GMT
Report

செல்ல பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு கால்நடை மருத்துவ மாணவர் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

செல்ல பிராணிகள்

கேரள மாநிலத்தில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் அபின் ஜாய். இவர் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு பொருத்தமான துணை தேடுபவர்களுக்கு உதவியாக புதிய வலைதளத்தை (vet-igo.in) உருவாக்கியுள்ளார்.

செல்ல பிராணிகளுக்கு dating app; இனி துணை தேடுவது ஈஸி - மருத்துவ மாணவர் புது முயற்சி! | Dating App For Domestic Animals

இதன் வழியாக பயனாளர்களில் அவர்களது வளர்ப்பு பிராணிகளுக்கான சிறந்த துணையை கண்டறியலாம்.தற்சமயம் இந்த வலைதளம் நாய்களுக்கான துணைகளை கண்டறிய மட்டுமே  செயல்படுகிறது. விரைவில் பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளின்

இணையை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாணவர் அபின் ஜாய் கூறியுள்ளார். இவரது இந்த புதிய முயற்சிக்கு கேவிஏஎஸ்யு பல்கலைக்கழகம் ஆதரவு அளித்ததால் தளம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ஆன்லைன் மூலமாக கால்நடை ஆலோசனைகளும் வழங்கப்படும் கூறியுள்ளார்.

21 வயது பெண்ணை மணந்த 51 வயது முதியவர் - அமெரிக்காவில் ருசிகர சம்பவம்

21 வயது பெண்ணை மணந்த 51 வயது முதியவர் - அமெரிக்காவில் ருசிகர சம்பவம்

மாணவர் புது முயற்சி

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மேற்கொண்டு வரும் அபின் ஜாய், கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் செல்லப்பிராணிகளுக்கான முதல் ஆன்லைன் 'மேட்ரிமோனி வலைதளம்' இதுவாக இருக்கும் என கூறுகிறார். செல்லப்பிராணிகளின் சுயவிவரங்களையும், படங்களையும் வழங்கும் 'vet-igo.in' வலைதளம்,

செல்ல பிராணிகளுக்கு dating app; இனி துணை தேடுவது ஈஸி - மருத்துவ மாணவர் புது முயற்சி! | Dating App For Domestic Animals

சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது. செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்களது வெப்ப சுழற்சியின் போது பொருந்தக்கூடிய பிராணிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள். இதை சரி செய்யும் விதமாக,

இந்த வலைத்தள மூலம் விருப்பப்படியே துணையை விரைவாக தேடலாம். தற்போது இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் சேவைக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.