ஆண்ட்ரியாவுடன் காதல் தோல்வி; இதுதான் காரணம் - முதல்முறை மனம் திறந்த அனிருத்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
ஆண்ட்ரியாவுடனான காதல் குறித்து அனிருத் மனம் திறந்துள்ளார்.
அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜவான் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தற்போது தலைவர் 171 படத்திலும், இந்தியன் 2 படத்திலும் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து, சுச்சி லீக்ஸ் மூலம், அவர்கள் இருவரும் நெருக்கமாக லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்ட்ரியாவுடன் காதல்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அனிருத்திடம், நீங்கள் காதலித்த நடிகை யார்? அவரின் பெயரையும் காதல் தோல்விக்கான காரணத்தையும் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், அந்த காதலி பெயர் ஆண்ட்ரியா.
19 வயதில் நான் அவரை காதலித்தேன். என்னுடைய முதல் காதலும் அவர்தான். அப்போது ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. எங்கள் காதல் தோல்விக்கு முக்கியமான காரணம் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான். ஆண்ட்ரியா என்னைவிட 6 வயது மூத்தவராக இருந்ததால் இருவருக்கும் செட் ஆகவில்லை. பிரிந்துவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.