21 வயது பெண்ணை மணந்த 51 வயது முதியவர் - அமெரிக்காவில் ருசிகர சம்பவம்
அமெரிக்காவில் 21 வயது பெண்ணை 51 வயது முதியவர் மணமுடிக்க உள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான பார்ட் வேட் என்பவர் அந்த நாட்டில் "சுகர் டேடி" என்ற இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை விரும்பும் படி டேட்டிங் செயலியை உருவாக்கினார். அதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 40 வயதிற்குபட்ட பெண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இதன் மூலம் வயதான ஆண்கள் மீது ஈர்ப்பு கொண்ட இளம் பெண்களுக்கும், இளம் பெண்கள் மீது ஈர்ப்பு கொண்ட வயதான ஆண்களுக்கும் தங்களுக்கான ஜோடியை தேட ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த செயலில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் பார்ட் வேட்டும் அந்த செய்லியை பயன்படுத்த தொடங்கிய போது அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான டானா என்ற இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது சந்தித்து ஒன்றாக சுற்றுவது தனிமையில் சந்தித்துள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.