மதம் மாற கட்டாயப்படுத்திய அப்ரிடி - முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!
மதம் மாறுமாறு அப்ரிடி வற்புறுத்தியதாக டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார்.
மத மாற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. 10 ஆண்டுகளில் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 261 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
2012ல் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் டேனிஷ் கனேரியா 2023ல் அளித்த பேட்டி ஒன்றில்,
கனேரியா குற்றச்சாட்டு
'கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தேன். அப்போதைய கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
ஆனால், ஷோயப் அக்தர், ஷாகித் அப்ரிடி உள்பட பல பாகிஸ்தான் வீரர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். என்னுடன் அமர்ந்து சாப்பிடக் கூட மாட்டார்கள்.
குறிப்பாக, ஷாகித் அப்ரிடி என்னை மதமாற்றம் செய்து கொள்ளும்படி பலமுறை வலியுறுத்தி கொண்டே இருந்தார். ஆனால், இன்ஜமாம் உல் ஹக் அதுபோன்று என்னிடம் நடந்து கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது கவனம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.