சிறந்த ICC அணி; ரோகித் சர்மாவிற்கு இடமில்லை - 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
2025 சாம்பியன்ஸ் டிராபி முடிந்த நிலையில், சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக தொடர் நாயகன் ரச்சின் ரவீந்திரா மற்றும் இப்ராஹின் ஜத்ரானும், ஆல்ரவுண்டர்களாக க்ளென் பிலிப்ஸ் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் இடம்பெற்றுள்ளனர்.
ICC அறிவிப்பு
பவுலர்களாக மேட் ஹென்றி, முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக இந்தியாவின் அக்சர் பட்டேலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை.
சிறந்த கேப்டன்சியை ரோகித் சர்மா செயல்படுத்திய நிலையில், அவருடைய பெயர் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.