இமான் வாழ்க்கையில் இப்பவும் அவருக்குத்தான் முதலிடம்; இவரு புருஷனா.. இமான் 2 வது மனைவி பளீச்!
இமான் குறித்து அவரது 2வது மனைவி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இமான்
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் டி இமான். முதல் மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து கொண்ட நிலையில், இரண்டாவதாக அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அமலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் அவரை வீட்டில் அத்தான் என்று தான் அழைப்பேன். அதற்கு ஒரு கதை ஒன்று இருக்கிறது. அதாவது என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவை அப்படித்தான் அழைப்பார்கள்.
மனைவி பேட்டி
அது இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் நானும் அவரை, அவர் ஆசைப்பட்டது போலவே, அப்படியே அழைக்கிறேன். என்னை ஆசையாக அம்மு என்று இமான் அழைப்பார். அவரது வாழ்க்கையில் அவர் முதலில் மகளுக்கு முதலிடத்தை கொடுப்பார்.

இரண்டாவதாக இசைக்கு, மூன்றாவது இடத்தை தான் எனக்கு அவர் தருகிறார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்ப்ரைஸ் செய்வார் எனத் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil