சிவா - இமான் விவகாரம்; சின்மயி வெளியிட்ட பகீர் தகவல் - ரசிகர்கள் ஷாக்!
பாடகி சின்மயி சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
சிவா - இமான் விவகாரம்
பாடகி சின்மயி, பத்திரிக்கையாளர் பிஸ்மியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இமான் - சிவகார்த்திகேயன் குறித்த விவகாரத்தை பேசியதாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பெண்களைப் பற்றி, குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பேசும்போது சற்று பொறுப்பாக இருக்குமாறு வலைப்பேச்சு பிஸ்மியிடம் தொலைபேசியில் பேசினேன்.
சின்மயி தகவல்
நான் பேச ஆரம்பித்ததிலிருந்து என்னிடம் ஒரு முரட்டுத்தனமான போக்கையே கையாண்டார் பிஸ்மி. குறிப்பாக பப்புக்கு போற பொம்பளை.. அவளுக்கு என்ன ஆனா என்ன? அவ மேல எனக்கு பரிதாபம் வரல. என்று கூறினார்.
என் விஷயத்தில் வைரமுத்துவை விட்டுவிட்டு என்னை குறை சொல்லிக் கொண்டிருந்தார். தற்பொழுது சிவகார்த்திகேயன் விஷயத்தில் இமானை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு ஒரு விஷயத்தில் ஆதாயம் கிடைக்கிறது என்றால் அதற்காக யாரையும் பழித்து பேச தயாராக இருக்கக்கூடிய ஒரு நபர்தான் இந்த பிஸ்மி. சகோதரனைப் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் நிஜத்தில் கொடூரமான மனிதராக நடந்து கொள்கிறார்.
அவர் பேசிய பேச்சுக்கும் அவருடைய தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை. பிஸ்மி ஆணாதிக்க ஒழுக்கங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.
பொம்பளைன்னா இப்படி இருக்கணும் பப்புக்கு போற பொம்பளைக்கு என்ன ஆனா என்ன என்றெல்லாம் பேசுகிறார். அவருடைய நிலைப்பாடு என்ன என்பது இதன் மூலம் எனக்கு தெரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.