சிவா மனைவி இதைத்தான் செய்யனும்; இமான் மாதிரி நிறையபேர்..வெளுத்து வாங்கிய பிரபல நடிகை!
சிவா - இமான் விவகாரம் குறித்து அனுபரமி பேசியுள்ளார்.
சிவா - இமான்
டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது.

இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார். இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. பல பிரபலங்கள் இந்த தகவல் குறித்து பேசியிருந்தனர்.
அனுபரமி காட்டம்
இந்நிலையில், நடிகை அனுபரமி "எல்லா ஆண்களுமே டி. இமான் செய்யக்கூடிய தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது கணவனுக்கு அந்த மனைவி எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்து, வீட்டை அக்கறையாக பார்த்துக் கொண்டு, உறுதுணையாக இருந்த போதிலும்,

அந்த பெண் வேறு யாருடனாவது அந்தரங்க தொடர்பு வைத்துக்கொண்டால், அவளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கேவலப்படுத்துவது என்பது இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் அதை ஆண் செய்யலாம். அதை இந்த சமூகம் எந்த கேள்வியும் கேட்பதில்லை.
ஒரு மனிதன் அடுத்த நொடியில், என்னவாக மாறுகிறான் என்பது அந்த சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. சிவகார்த்திகேயனை அவர்கள் கட்டம் கட்டி இருக்கிறார்கள். தெரிந்தே திட்டமிட்டு உலகத்தாரிடம் கற்களைக் கொடுத்து டி. இமான் மூலமாக அடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் இந்த விஷயத்தில் இருந்து, சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் மீண்டும் வந்து விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil