இமான் இதை சொல்ல காரணமே இதுதான்; சிவா வளர்ச்சி பிடிக்கல - நடிகை பளீச்!

Sivakarthikeyan Tamil Cinema D Imman
By Sumathi Oct 30, 2023 09:15 AM GMT
Report

தூண்டுதலின் பேரில் தான் இமான் இப்படி செய்ததாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

டி.இமான் 

டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது. இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார்.

இமான் இதை சொல்ல காரணமே இதுதான்; சிவா வளர்ச்சி பிடிக்கல - நடிகை பளீச்! | Ctress Anuparami About Iman Sivakarthikeyan Issue

இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசினார். கள்ள உறவில் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம் என இமான் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

நடிகை ஓபன்டாக்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகை அனுபரமி, இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகி விடும் என்று நினைக்கும் இமான், விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டபின் இப்போது இதுகுறித்து பேச என்ன அவசியம் இருக்கிறது.

இமான் இதை சொல்ல காரணமே இதுதான்; சிவா வளர்ச்சி பிடிக்கல - நடிகை பளீச்! | Ctress Anuparami About Iman Sivakarthikeyan Issue

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இதனை செய்துள்ளார். இமானுக்கு தனது குழந்தை மீது இருக்கும் பாசத்தால் சிவா செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொன்னார். அப்போ, சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும். யாராக இருந்தாலும் தயவு செய்து அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.