சக்கரம் நமக்குத்தான்: தீவிரமெடுக்கும் மிக்ஜாங் புயல் - டிச.3,4ல் காட்டப்போகும் கனமழை!
வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாங் புயல் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாங் புயல்
டிசம்பர் 2ஆம் தேதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்ட நிலையில், இது தாமதமாகி வரும் டிசம்பர் 3ஆம் தேதி மிக்ஜாங் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிக்ஜாங் புயல் ஆனது வங்கதேசத்தை நோக்கி நருமா அல்லது மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திராவை நோக்கி செல்லுமா என்பது உள்ளிட்ட பலகேள்விகள் இருந்த நிலையில், இந்த மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 4ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழைக்கு வாய்ப்பு
எனவே அந்த தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், 29ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழையின் அளவு அதிகரிக்கும். தினமும் லேசான மழை பெய்யும்.
எல்லாருடைய கவனமும் காற்றழுத்தத்தின் மீதுதான் இருக்கிறது. இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்பதை காட்டிலும் வடதமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் என்பது உறுதி. சக்கரம் நமக்குத்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.