இரவு முழுக்க ஓயாமல் களத்தில் இறங்கிய மேயர் பிரியா - 1 நாள் மழையில் திணறிய மாநகரம்!
இரவு முழுக்க மேயர் பிரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
ஓயாத மழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் பிரியா பார்வையிட்டார். மேலுநேரடியாக சுரங்க பாதைகளுக்கு சென்று அங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.
மேயர் ஆய்வு
இரவோடு இரவாக மழையில் ரெயின் கோட்டோடு, கையில் வாக்கு டாக்கியோடு பார்வையிட்டது கவனம் பெற்றுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார். அதிக மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் உதவி தேவைப்படுவோர் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள், ஆங்காங்கே ஆய்வில் ஈடுபட்டு பணிகளை துரிதப்படுத்தினர். மழை விட்ட சில மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது.