திடீரென மன்னிப்பு கேட்ட சென்னை மேயர் பிரியா ராஜன்..!
சென்னை மேயர் பிரியா ராஜன் அன்றாடம் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் அவரை பற்றி ஐபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஸ்டூடியோ திறப்பு விழா
ஐபிசி தமிழின் புதிய ஸ்டூடியோ திறப்பு விழா சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஐபிசி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் புதிய ஸ்டூடியோவை திறந்து வைத்தார்.
பின்னர் ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு புன்னகையுடன் தான் சந்தித்து வரும் சவால்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதலமைச்சருக்கு நன்றி
அதில், தனக்கு தேவையான ஆடைகளை கணவர் தான் தேர்ந்தெடுப்பார் என்றும் பல்வேறு சூழலில் என்னுடன் இருப்பது என்னுடைய கணவர் தான்.
தான் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியே செல்வதாக இருந்தால் இரவு நேரத்தில் தான் உணவகம் உள்ளிட்டவற்றிக்கு செல்வோம் என்றார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சர் இளைஞர்களை ஆதரிப்பதாகவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் சார்ந்த அறிவுரைகளை தனக்கு அமைச்சர் சேகர் பாபு கொடுப்பார் என்றும் தெரிவித்தார். மேயர் பதவி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட மேயர்
நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகளை அவர் மிகவும் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்...