பரிதாபம்..பிலிப்பைன்ஸ் நாட்டில் தோண்ட தோண்ட வந்த உடல்கள் - 65 பேர் பலி!

Philippines Death World Cyclone
By Vidhya Senthil Oct 26, 2024 07:24 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் டிராமி புயல் காரணமாக அங்குள்ள பல மாகாணங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கும் மிக மோசமான புயல்களில் ஒன்று.

philippines landslides

இதனால் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்களில் கனமழை பெய்தது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர். இதன் காரணமாகப் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கடையில் இன்றைய ஸ்பெஷல் போதை பீட்சா.. வாங்க குவிந்த மக்கள்- வெளியான ஷாக் உண்மை!

கடையில் இன்றைய ஸ்பெஷல் போதை பீட்சா.. வாங்க குவிந்த மக்கள்- வெளியான ஷாக் உண்மை!

கனமழையைத் தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தனர். இந்த சம்பவத்தைத் தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நிலச்சரிவு

எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலியாகினர். இதன்மூலம் டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்குப் பலியானோரின் 65-ஐ தாண்டியது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

landslides death

படங்காஸில் இன்னும் 11 கிராமவாசிகள் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் புயல் பாதிப்பால் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 320,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.