கடையில் இன்றைய ஸ்பெஷல் போதை பீட்சா.. வாங்க குவிந்த மக்கள்- வெளியான ஷாக் உண்மை!
பீட்சாவுடன் போதை பொருளை விற்பனை செய்த கடை மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போதை பீட்சா..
ஜெர்மனியில் உள்ள பீட்சா கடை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
அதாவது, "நம்பர் 40" என்று சொல்லப்படும் இந்த பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, போலீசார் ரகசியமாக அந்த கடையை கண்காணித்து வந்தனர்.
அப்போது பீட்சாவுடன் சைட் டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதைப்பொருளும் வழங்கப்பட்டதே மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கடையின் மேலாளரை தேடி அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
கடை ஸ்பெஷல்
மேலும் அவர் வீட்டில் இருந்து 268,000 யூரோ ரொக்கம், 1.6 கிலோ கொக்கெய்ன் மற்றும் 400 கிராம் கஞ்சா உட்பட பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணைக்குப் பின் கடை மேலாளாரை போலீசார் விடுத்துள்ளனர்.
இருப்பினும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை செய்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது.