அட புதுசா இருக்கே.. கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்டா? அரசு வழங்கிய காரணம் இதுதான்!

Queen Elizabeth II Passport England World
By Swetha Oct 24, 2024 07:56 AM GMT
Report

அரசு ஒன்று முதல்முறையாக புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.

பாஸ்போர்ட்

இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட், 1958ம் ஆண்டு 'பட்டிங்டன்' என்ற சிறுகதை புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுத்தப்பட்டுள்ளது.

அட புதுசா இருக்கே.. கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்டா? அரசு வழங்கிய காரணம் இதுதான்! | Uk Govt Gives Paddington Bear A Real Passport

இந்த புனைவு சிறுகதை புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்து மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து அந்த பாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மட்டுமின்றி சினிமா படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டாம் - எதெல்லாம் தெரியுமா?

இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டாம் - எதெல்லாம் தெரியுமா?


வழங்கிய அரசு

மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக 'பட்டிங்டன்' கரடி விளங்கியது. இந்த நிலையில், 'பட்டிங்டன்' கதாபாத்திரத்தை தழுவி உருவாகும் புதிய சினிமா படத்துக்காக போலியாக பாஸ்போர்ட் ஒன்றை உருவாக்கி தருமாறு குடியேற்றத்துறை,

அட புதுசா இருக்கே.. கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்டா? அரசு வழங்கிய காரணம் இதுதான்! | Uk Govt Gives Paddington Bear A Real Passport

அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், இங்கிலாந்து அரசு 'பட்டிங்டன்' பெயரில் அசல் பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.