தலையை வெட்டி தொங்க விடுவோம் - சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சி.வி .சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சரும் , விழுப்புரம் மாவட்ட மாவட்ட செயலாளரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சி.வி. சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் இன்று நேரில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், தான் அதிமுக கட்சியில் உள்ளேன். சி.வி. சண்முகம் ஆதரவாளரான நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர்,
கொலை மிரட்டல்
குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், தலையை வெட்டி தொங்க விடுவோம் என்று மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் சி.வி. சண்முகம் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சி.வி .சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
புகார்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக நிராகரிப்பதாக மேடையில் தெரிவித்த சி.வி. சண்முகம்,
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டன என்றும் பேட்டி அளித்துள்ளார். இந்த சூழலில் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல போராட்டங்களை மீறியும் தொடங்கிய அக்னிபத் திட்டம்..!