பல போராட்டங்களை மீறியும் தொடங்கிய அக்னிபத் திட்டம்..!

Armed Forces Uttar Pradesh India Bihar
By Sumathi Jun 25, 2022 06:35 AM GMT
Report

இளைஞர்களின் கடும் எதிர்ப்பையும், போராட்டங்களையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடங்கியுள்ளது.

 அக்னிபாத்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கி உள்ள நிலையில் பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

பல போராட்டங்களை மீறியும் தொடங்கிய அக்னிபத் திட்டம்..! | Agnipath Project Launches Despite Opposition

தெலுங்கானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்காண்டுகளுக்காக மட்டுமே என ராணுவ படைக்கு ஆளெடுத்து

 கடும் எதிர்ப்பு

அவர்களை அக்னிவீரர்களென பயிற்சியளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்கிற இத்திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவைச் சிதைப்பதாகவுள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல போராட்டங்களை மீறியும் தொடங்கிய அக்னிபத் திட்டம்..! | Agnipath Project Launches Despite Opposition

பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் முதலான வட மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆட்சேர்ப்பு

இதனால் இத்திட்டத்தை திரும்பப்பெற தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும்

அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

அடுத்தக்கட்ட நகர்வில் கைலாசா.. ஆப்பிரிக்க நாட்டிற்கு வலைவிரிக்கும் நித்தி!