"தேச நலனுக்கு எதிரான அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அக்னி பாத் திட்டம்
இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் கடும் எதிர்ப்பு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் போராட்டம்
இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்னி பாதை ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உ.பி.யில் 260 பேர் கைது
பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள். பல இடங்களில் ரயில்களை உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட 260 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் டுவிட்
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், தேச நலனுக்கு எதிரான அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். pic.twitter.com/7fCf3mxYhp
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 18, 2022