இலங்கையில் ஊரடங்கு அமல் - ராணுவம் குவிப்பு..பதற்றம் அதிகரிப்பு..!

Sri Lankan protests Sri Lanka Economic Crisis
By Thahir Jul 08, 2022 04:34 PM GMT
Report

இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Sri lanka Ecnomic Crisis

இந்த நிலையில் இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை எல்லைகளுக்கு உட்பட பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka Police

பாதுகாப்பு அதிகரிப்பு

அதிபர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக கோரி மக்கள் நாளை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தலைநகர் கொழும்புவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகை,அலுவலகம் , உறவினர்கள் இல்லம் , மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகம் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணி நேரத்தில் மது அருந்திய காவல்துறை அதிகாரி - வைரலாகும் வீடியோ