அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவாரா ? - பேராசிரியரின் அதிரடி பதில்..!
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் அதிபர் பதவி விலகாதது குறித்தும் இலங்கையில் நிலவ கூடிய அசாதரண சூழல் குறித்து பேராசியர் பெர்னார்டு டி சாமி ஐபிசி தமிழின் மெய் பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கம் அளித்தார்.
இலங்கையில் போராடக் கூடிய மக்கள் இந்த அரசு எங்களை வஞ்சித்து விட்டது.எங்களை ஏமாற்றிவிட்டது.இந்த அரசும் இந்த அரசை சார்ந்தவர்களும் போக வேண்டும் என்பதை தான் மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.
இலங்கை ஒரு அவையை கொண்ட நாடு,இந்தியா,இலங்கை போன்று இரு அவைகளை கொண்ட பாராளுமன்றம் உள்ள நாடு அல்ல.
225 உறுப்பினர்கள் அதிபர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்.அதை உச்ச நீதிமன்றம் ஆராயும்.
பின்னர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினால் தான் அதிபரை நீக்க முடியும் என்றார்.
இலங்கை அதிபரை நீக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள காரணத்தினால் மக்கள் அவரை ராஜினாமா செய்ய சொல்வதாக கூறினார்.
மேலும் முழு தகவல்களை அறிந்து கொள்ள கிழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து காணெளியை காணுங்கள்.