எனக்கு ஆடம்பர பிரதமர் மாளிகை வேண்டாம், வீட்டில் இருந்தே வேலைய செய்கிறேன் : ரணில் விக்ரமசிங்க
Ranil Wickremesinghe
By Irumporai
3 years ago
பிரதமரின் ஆடம்பர மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தான் பணி செய்யப் போவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேர்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகையான அலரி மாளிகை தயாரானது.
பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் தான் வீட்டிலிருந்தே பணி செய்யப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார் .
மேலும், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு தனக்கும் பொருந்தும் என்றும் கொழும்புவில் உள்ள வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க போவதாகவும் அமைச்சர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் ரணில் கூறியுள்ளார்.