1 வாரத்துக்கு முன்பே வெளியான போட்டி முடிவு; RCB ஜெயிச்சது ஸ்க்ரிப்ட்டா? இதுதான் விஷயம்!
ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது தொடர்பாக ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
பெங்களூரு வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் முன்னதாக எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் செல்லும்? என்ற கணிப்பை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ஜியோ சினிமா இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆஃப் செல்லும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்தில் இடம்பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்பு வெளியிடப்பட்டிருந்த போது பெங்களூரு அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. ஆனால், அந்த போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் முன்னேறும் என முன்பே கணிக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்கள் சந்தேகம்
மேலும், கடைசி போட்டியில் அந்த அணி சென்னை அணியை வீழ்த்தும் எனவும் ஜியோ சினிமா இணையதளத்தில் கணிக்கப்பட்டு இருந்தது. அந்த கணிப்பை போலவே பெங்களூரு அணி, சென்னை அணியை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சென்றுள்ளது.
இந்நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த கணிப்பு வெளியிடப்பட்ட போது அதிக வாய்ப்பு கொண்ட 4-வது அணியாக சென்னை அணி தான் இருந்தது. ஆனால், அப்போதே சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என ஜியோ சினிமா கணித்திருந்தது.
இது எப்படி? என தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் முன்னேற வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டு தான் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறதா? எனவும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால், தோல்வியின் விரக்தியில் ரசிகர்கள் இதுபோன்று சந்தேகித்து வருகுவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.