மாநகர பேருந்துகளில் CSK அணி செய்த மாற்றம் - இப்படி ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலையே!
மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு 8,000 உலோக (Metal) விசில்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வழங்கவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றிகள், 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மீதமுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றால் சென்னை அணி எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு 8,000 உலோக (Metal) விசில்களை வழங்கவுள்ளது.
சிஎஸ்கே மகிழ்ச்சி
இதுதொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ் விஸ்வநாதன் கூறுகையில் "எம்டிசி பேருந்துகளின் நடத்துநர்களுக்கு விசில் வழங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகிழ்ச்சியடைகிறது.
விசில் எப்போதும் சிஎஸ்கே மற்றும் சென்னையுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது. உலோக விசில்கள் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு சிறிய படியாகும்" என்று தெரிவித்துள்ளார்.