விஜய்சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில், மகாகாந்தி என்பவர் குரல் எழுப்பி அழைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் சேதுபதி அவரை தாக்கியதாக புகார் எழுந்தது.
தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது மகாகாந்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாருக்கு விளக்கமளிக்குமாறு விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மனு தள்ளுபடி
அதனையடுத்து, விஜய் சேதுபதி தரப்பில் அந்த வழக்கைத் தடை செய்ய வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கனவே இந்த பிரச்சனையைப் பேசி முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்கோள் காட்டியது.
அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாகவும், மகா காந்தி தரப்பில் அவதூறு பரப்பி வருவதாகவும் கூறப்பட்டது. அதன்பின், மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கிரிமினல் அவதூறு வழக்கை விஜய் சேதுபதி நீதிமன்றத்தில் சந்திக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.