விஜய் சேதுபதி தாக்கப்பட்டது உண்மையில்லை : விளக்கம் கொடுக்கும் பெங்களூரு போலீசார்

attack airport bengaluru vijaysethupathi
By Irumporai Nov 03, 2021 10:50 PM GMT
Report

பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றுபெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதிபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

. விமான நிலையத்தில் உதவியாளர்கள் மற்றும் காவலர்களுடன் விஜய் சேதுபது நடந்து சென்று கொண்டிருக்க திடீரென அங்கு வரும் ஒருவர் ஏறி காலால் உதைப்பது போல் அந்த வீடியோ உள்ளது.

ஆனால், விஜய்சேதுபதி மீது அடி விழுந்ததா என தெரியவில்லை. ஆனால், அப்போது விஜய்சேதுபதி நிலைகுலைந்து போனார். t

இந்த நிலையில், காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜய்சேதுபதியின் உதவியாளர் தான் தாக்கப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது. 

இதனை  பெங்களூருவி உள்ள தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், :

நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி, அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நடந்த தாக்குதலே இது.

ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய் சேதுபதியை அல்ல. சிலர் இதை கன்னட மற்றும் தமிழர்கள் இடையே நடைபெறும் தாக்குதல் என சித்தரிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான செய்தி அது. இதுவரை இந்த விவகாரத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளராக உண்மை செய்தியை பதிவு செய்கிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.