அவர் பேரு எனக்கு வேண்டாம், நான் வேற - விஜய்சேதுபதி மகன் பேச்சு!
விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி மகன் சூர்யா. இவர் கதாநாயகனாக அனல் அரசு இயக்கத்தில் ‘ஃபீனிக்ஸ்-வீழான்’ என்ற ஆக்ஷன் - ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் பட பூஜை இன்று காலை நடைபெற்றது.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா, ”அப்பாவோட படப்பிடிப்பில் அவருக்கு சாப்பாடு கொடுக்கப் போனேன். அப்போதுதான் மாஸ்டரைப் பார்த்தேன். எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு நல்லப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.
மகன் பேச்சு
அந்த சமயத்தில்தான் அனல் மாஸ்டர் என்னைப் பார்த்து அவருக்கான கதையில் என்னைத் தேர்ந்தெடுத்தார். அப்பாவுக்கும் கதை பிடித்திருந்தது. அப்பா வேற, நான் வேற. அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன்.
அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போக பார்த்துக் கொள்ளலாம்.
அப்பா மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளதால் இங்கு கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.