கணவன் கண்முன்னே மனைவிக்கு அரங்கேறிய கொடூரம் - ஹரியானாவில் கொடூரமாக கொலை!
ஹரியானாவில் நிலத் தகராறு காரணமாகக் கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குடானா கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் - முன்னிதேவி தம்பதியினர். இவர்கள் இருவரும் நேற்று, மகேந்திரகர் சதார் காவல் நிலையத்தில் நிலத் தகராறு காரணமாக மோகித் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்துள்ளனர்.பின்னர் விசாரணை முடிந்து பேருந்து நிலையத்தில் முன்னிதேவியும், அவரது கணவரும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த மோகித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் முன்னிதேவியின் நெற்றியில் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
சுட்டுக் கொலை
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் முன்னிதேவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து தப்பியோடிய மோகித்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டப்பகலில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.