பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்..குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது - பிரதமர் பரபரப்பு பேச்சு !

Narendra Modi India Murder
By Vidhya Senthil Aug 25, 2024 06:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது பேசியவர் பெண்களின் பாதுகாப்பு நாட்டிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குக்கும் நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்..குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது - பிரதமர் பரபரப்பு பேச்சு ! | Crime Against Women An Unpardonable Pm Modi

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம். குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது. அவர்களுக்கு எந்தவகையில் உதவி செய்பவர்களையும் விட்டு விடக்கூடாது. மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், பெண்களின் கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பது அரசு மற்றும் சமூகமாக நம் அனைவரின் பொறுப்பாகும்" எனத் தெரிவித்தார்.

சொன்னது போலவே நடந்து விட்டது; இளவரசரே அஞ்சாதீர்கள் - பிரதமர் மோடி தாக்கு!

சொன்னது போலவே நடந்து விட்டது; இளவரசரே அஞ்சாதீர்கள் - பிரதமர் மோடி தாக்கு!

கொல்கத்தா

முன்னதாக கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஜூலை 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளிப் பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்..குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது - பிரதமர் பரபரப்பு பேச்சு ! | Crime Against Women An Unpardonable Pm Modi

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரேதப் பரிசோதனை பாலியல் வன்கொடுமையும் ஆளாக்கப்பட்டதும் .பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பெண் மருத்துவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.