சொன்னது போலவே நடந்து விட்டது; இளவரசரே அஞ்சாதீர்கள் - பிரதமர் மோடி தாக்கு!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி.
மக்களவை தேர்தல்
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அமேதி மக்களவை தொகுதி வேட்பாளராக கே.எல்.சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அஞ்சாதீர்கள்
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி "வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் (ராகுல் காந்தி) போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். அச்சப்பட்டு ஓடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.