கிரிக்கெட் வாழ்க்கை ஓவர்: இங்கிலாந்து வீரருக்கு 17 ஆண்டுகள் தடை - ஐசிசி அதிரடி!
இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு 17 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்ச் பிக்சிங்
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி10 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த கிளப் கிரிக்கெட் வீரர் 'ரிஸ்வான் ஜாவேத்' என்பவர் பங்கேற்றார்.
அந்த தொடரில், தொடர்ந்து 3 போட்டிகளிலும் அவர் மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை ஐசிசி, குழு அமைத்தது விசாரித்து வந்த நிலையில், ரிஸ்வின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. 2021 முதல் 2023 வரை ஐசிசி குழு ரிஸ்வானுக்காக காத்திருந்தபோதும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
விளையாட தடை
இந்நிலையில் இறுதி முடிவு எடுக்க கூடிய ஐசிசி குழு, விசாரணைக்கு ஒத்துழைக்காத ரிஸ்வான் குற்றவாளி என முடிவு செய்தனர். மேலும், தொடர்ந்து 3 போட்டிகளில் அவர் மேட்ச் பிக்சிங் செய்தார் என முடிவு செய்து, அவருக்கு 17 ஆண்டுகள், 6 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிஸ்வானின் அணியில் இடம்பெற்ற வங்கதேச வீரர் நாசிர் ஹோசைனும் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைத்ததால் அவருக்கு 2 வருடங்கள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.