பென் ஸ்டோக்ஸ் வீட்டில் நடந்த பயங்கரம் -நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர் !
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்தின் கேஸ்டில் ஈடன் பகுதியில் பென் ஸ்டோக்ஸ் தனது மனைவி 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி முகமூடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் நேரத்தில் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்து விலை மதிப்புள்ள பொருட்கள், நகைகள், உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளார்கள்.
அவற்றில் பெரும்பாலான பொருட்கள் பென் ஸ்டோக்ஸிற்கு சென்டிமென்ட் ரீதியாகத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. மேலும் முகமூடி கொள்ளையர்கள் பென் ஸ்டோக்ஸின் குடும்பத்தினரை எதுவும் செய்யவில்லை . இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது தனது சமூக வளைதப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :
நகைகள், இதர விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஏராளமான தனிப்பட்ட பொருட்களுடன் அவர்கள் தப்பிச் சென்றனர். அந்த பொருட்களில் பல எனக்கும் எனது குடும்பத்திற்கும் உண்மையான உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன. அவை மாற்ற முடியாதவை.
மன உளைச்சல்
இந்தக் குற்றத்தின் மிக மோசமான விஷயம் என்னவெனில், எனது மனைவியும் 2 சிறு குழந்தைகளும் வீட்டில் இருந்தபோது இந்த குற்றச்செயல் நடந்தது அதிர்ஷ்டவசமாக, எனது குடும்பத்தினர் யாருக்கும் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், அனுபவம் அவர்களின் உணர்ச்சி மற்றும் மன நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை என்னால் சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை மேலும் திருடு போன சில பொருட்களின் படங்களை வெளியிட்டு இந்த பொருட்களை எளிதாக அடையாளம் காண முடியும்.
அதன் மூலம் தனக்கு உதவுமாறு டென் ஸ்டோக்ஸ் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து இந்த சம்பவம் குற்றிது வழக்குப் பதிவு செய்த இங்கிலாந்து காவல்துறையினர் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்