தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

COVID-19 Government of Tamil Nadu
By Thahir Jul 08, 2022 09:25 PM GMT
Report

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று 

அதில் தமிழகத்தில் புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,413 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் 18,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! | Covid Cases In Tamil Nadu

கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று 939 ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 474, திருவள்ளூர் 191, காஞ்சிபுரம் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் கமிஷனர் அலுவலகத்தில் மனு..!