தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 2,700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும்,
கொரியா அமெரிக்கா டெல்லி கேரளா மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த 2,758 நபர்களுக்கு என 2,765 நபர்களுக்கு மேலும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 61 லட்சத்து 83 ஆயிரத்து 356 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் 34 லட்சத்து 93 ஆயிரத்து 599 நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் உயிரிழப்பு
மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 2,103 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 193 என உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த நான்கு மாதத்தில் மூன்றாவது நபராக திருவாரூர் மாவட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு..!