அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு..!

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 07, 2022 04:27 PM GMT
Report

அதிமுக பொதுகுழுவுக்கு தடை கோரிய வழக்கை நாளை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை கோரிய மனு விசாரணை 

ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுகுழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்தி வைப்பு..! | Aiadmk General Committee Case Tomorrow

பரபரப்பாக நடந்தது இந்த வழக்கின் விசாரணை.இந்த விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.

கேள்விகளால் துளைத்தெடுத்த உயர்நீதிமன்றம் 

பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்?

பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? உள்ளிட்ட கேள்விகளை அடுக்கடுக்காக சென்னை உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.

விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

குர் ஆன் வாசிப்பவர்கள் பயங்கரவாதிகள் : கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் கருத்தால் சர்ச்சை