குர் ஆன் வாசிப்பவர்கள் பயங்கரவாதிகள் : கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் கருத்தால் சர்ச்சை
கர்நாடகாவில் 'ஜகரன் வேதிகே' என்ற இந்து அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கண்டன ஆர்பாட்டம்
ராஜஸ்தானில் தையல் கடைக்காரரை இரண்டு முஸ்லீம்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் பலரும் கண்டனம் எழுப்பினர். கடந்த ஜூலை 1-ம் தேதி கர்நாடக்காவில் இதற்கு கண்டனம் தெரிவித்து 'ஜகரன் வேதிகே' என்ற இந்து அமைப்பு போராட்டம் நடத்தியது.
சர்ச்சைக்குறிய பேச்சு
அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி “மக்களை கொல்ல வேண்டும் என்று குர் ஆன் சொல்கிறது. எனவே, குர் ஆன் வாசிப்பர்கள் அதை பின்பற்ற மாட்டார்கள் என ஏன் நாம் நினைக்கக் கூடாது? குர் ஆன் வாசிப்பர்கள் பயங்கரவாதிகள்" என்று கூறியுள்ளார்.
டாக்டர் பெண்ணை திருமணம் செய்தார் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் - வைரலாகும் புகைப்படம்
வழக்குப்பதிவு
இவரது இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு ஒன்றை சேர்ந்த ஜாமீர் அகமது என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனைத்தொர்ந்து, இரு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் (153 ஏ), கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் பேசுதல்(153 பி) மத உணர்வுகளை புண்படுத்துதல் (295ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.