டாக்டர் பெண்ணை திருமணம் செய்தார் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் - வைரலாகும் புகைப்படம்

Marriage Viral Photos
By Nandhini Jul 07, 2022 10:14 AM GMT
Report

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

வெற்றி வாகை சூடிய பக்வந்த் மான்

இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் போட்டியிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு பக்வந்த் மான் முதல்வராகியிருக்கிறார்.

சமீபத்தில், பஞ்சாப் சுகாதார அமைச்சராக இருப்பவர் விஜய் சிங்லா. இவர் அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதையடுத்து, விஜய் சிங்லாவை அமைச்சரவையிலிருந்து பகவந்த் மான் அதிரடியாக நிக்கி உத்தரவிட்டார்.

பஞ்சாப் முதல்வர் திருமணம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்பீத் கவுரிக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட அனைவரும் பஞ்சாப் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Bhagwant Maan - wedding

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்... - இங்கிலாந்து அரசியலில் பரபரப்பு