பஞ்சாப்பில் ஊழல் புகாரில் மாட்டிய அமைச்சர் பதவி நீக்கம் - முதல்வர் பக்வந்த் மான் அதிரடி
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் போட்டியிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு பக்வந்த் மான் முதல்வராகியிருக்கிறார்.
இந்நிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சராக இருப்பவர் விஜய் சிங்லா. இவர் அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, விஜய் சிங்லா அமைச்சரவையிலிருந்து பகவந்த் மான் அதிரடியாக நிக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த ஊழல் புகார் தொடர்பாக இவர் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.