மன நலம் பாதிக்கப்பட்ட மகள் - கொடூரமாக கொலை செய்த பெற்றோர்!

Telangana Crime Death
By Sumathi May 20, 2024 11:44 AM GMT
Report

 மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பெற்றோர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதித்த மகள்

தெலங்கானா, நெரெல்லாவைச் சேர்ந்தவர் செப்யாலா நர்சய்யா (49). இவரது மனைவி யெல்லவ்வா (43). இவர்களது மகள் பிரியங்கா(24). இவர் பல ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

மன நலம் பாதிக்கப்பட்ட மகள் - கொடூரமாக கொலை செய்த பெற்றோர்! | Couple Killed Mentally Ill Daughter In Telangana

தொடர்ந்து, அவரது பெற்றோர் சிகிச்சை அளித்து, பின் திருமணமும் செய்து வைத்தனர். தற்போது, அவருக்கு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரியங்காவுக்கு மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு, அவரை பல வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பேய் ஓட்டுவதாகக் கூறி மனநலம் பாதித்த பெண்ணை சங்கிலியால் கட்டி பிரம்பால் அடித்து  சாமியார் சித்ரவதை!

பேய் ஓட்டுவதாகக் கூறி மனநலம் பாதித்த பெண்ணை சங்கிலியால் கட்டி பிரம்பால் அடித்து சாமியார் சித்ரவதை!

பெற்றோர் வெறிச்செயல்

ஆனாலும், அவர் குணமடையாததால் பெற்றோர் அவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் சேர்ந்து, பிரியங்கா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து, கொலை செய்துள்ளனர்.

மன நலம் பாதிக்கப்பட்ட மகள் - கொடூரமாக கொலை செய்த பெற்றோர்! | Couple Killed Mentally Ill Daughter In Telangana

மேலும், பிரியங்கா இயற்கை மரணமடைந்து விட்டதாக கணவருக்கு தெரிவித்து இறுதிச் சடங்கு நடத்தியுள்ளனர். ஆனால், இந்த இறப்பில் சந்தேகம் எழுந்ததால் ஊர்க்காரர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.