மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்!
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.
10 ஆண்டு சிறை
போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, முத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு - தலை துண்டித்துக் கொலை செய்த பயங்கரம்!
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil