பெண் முகத்தை தலையனையால் அமுக்கி கொன்ற கள்ளக்காதல் ஜோடி - பகீர் பின்னணி!
பெண் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகை திருட்டு
கோவை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவருடைய மனைவி தனலெட்சுமி(37). பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த இவர் மூக்கில் ரத்தம் வடிந்தபடி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் அளித்த புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வால்பாறை சோலையார் நகரை சேர்ந்த சந்திரஜோதி (41), பெரம்பலூர் மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த சுரேஷ் (39) என்பதும், கள்ளக்காதலர்கள் என்பதும் தெரியவந்தது.
பெண் கொடூர கொலை
கணவன், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த இருவரும் சிறையில் பழக்கமாகி பின் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில், தனலட்சுமியின் வீட்டில் தான் வாடகைக்கு சுரேஷ் வசித்து வந்துள்ளார். அப்போது தனலட்சுமி நிறைய நகை அணிந்து இருப்பார். இதனால் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க பல நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து, சம்பவத்தன்று, சந்திரஜோதி தனலட்சுமியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு செய்து, அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சுத்திணறடித்து கொலை செய்துள்ளனர்.
பின், பீரோவில் பணம் எதுவும் இல்லாததால் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் அவரது செல்போனை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
தற்போது பதுங்கியிருந்த ஜோடியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி கைது செய்துள்ளனர்.