அண்ணியுடன் கள்ளக்காதல்; உல்லாசத்திற்கு இடையூறாக அண்ணன் - ஸ்கெட்ச் போட்ட தம்பி!
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் யாமினி (20) என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியில் சென்ற விக்னேஷ் இன்று காலை சித்தேரி மாந்தோப்பு பகுதி பின்புறம் உள்ள கிணற்றின் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையறிந்து விரைந்து வந்த போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்த விக்னேஷின் சித்தி மகன் (தம்பி முறை) ஆந்திராவை சேர்ந்த சதீஷ் (22). இவர் கடந்த சில மாதங்களாக சித்தேரி விநாயகபுரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அண்ணன் முறையான விக்னேஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது அண்ணி முறையான யாமினியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் உறவுமுறையை மறந்து, அடிக்கடி தனிமையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தங்களது கள்ளக் காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருக்கிறார் என யாமினியும், சதீஷும் கூட்டு சேர்ந்து விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கணவன் கொலை
கொலைசெய்யப்பட்ட விக்னேஷுக்கு நேற்று பிறந்தநாள் எனக் கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு சதீஷ், விக்னேஷ் வீட்டிற்கு வந்து உனக்கு பார்ட்டி தருகிறேன் என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு போய் மது ஊற்றிக்கொடுத்துள்ளார்.
விக்னேஷிற்கு போதை தலைக்கேறியதும், பர்த்டே சர்ப்ரைஸ் ஒன்று தருகிறேன் என்று சொல்லி தான் வைத்திருந்த கருப்பு துணியால் விக்னேஷிடம் கண்களை மூடிக்கொள் என கூறி துணியால் கண்களை கட்டியுள்ளார். அதன் பிறகு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
இன்று யாமினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார். இதனால் போலீசாருக்கு யாமினி மீது சந்தேகம் வலுத்தது. போலீசாரின் தொடர் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவங்கள் அனைத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை யாமினிதான் சதீஷிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.