திருமணம் செய்தால்தான் ஜாமீன்.. கோர்ட்டிலேயே தாலி கட்டிய இளைஞர்!
இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காதல்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் வயது 22, சத்யா வயது 20 ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
மேலும் இவர்கள் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குழந்தை
இந்நிலையில் அஜித் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர், இந்த வழக்கு முழுவதும் தம்பதியினர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், முதலில் திருமணத்தை முறைப்படி நடத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும், திருமணம் செய்தால் அஜித்துக்கு ஜாமீன் தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சத்யாவை திருமணம் செய்து கொள்ள அஜித்தும் ஒப்புக்கொண்டார்.
ஜாமீன்
பின்னர் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்க பெண் வழக்கறிஞர் குழுவை நீதிபதி நியமித்தார். இதன்படி இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலிலேயே இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண் வழக்கறிஞர்கள் மற்றும் ஆண் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அஜித் சத்யாவிற்கு திருமணம் நடத்தப்பட்டது.
திருமணம்
இதில் அஜித் மற்றும் சத்யாவின் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து திருமணம் செய்து கொண்ட அஜித்தை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றனர்.
பாலிவுட்டில் களமிறங்கும் சமந்தா.. இவருக்கு ஜோடியாவா!