‘எங்களை கூப்பிடுவார்ன்னு நினைக்கல்ல... விக்னேஷ் எங்க வீட்டுப்பிள்ளை..’ - ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

Nayanthara Vignesh Shivan Wedding
By Nandhini Jun 09, 2022 12:56 PM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாரா - விக்னேஷ்

திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

பிரபலங்கள் பங்கேற்பு

இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

‘எங்களை கூப்பிடுவார்ன்னு நினைக்கல்ல... விக்னேஷ் எங்க வீட்டுப்பிள்ளை..’ - ஆசிரியர்கள் நெகிழ்ச்சி | Nayanthara Vignesh Shivan Wedding

வைரலாகும் புகைப்படம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஆசிரியர்கள் நெகிழ்ச்சி பேச்சு...

விக்னேஷ் எங்க வீட்டுப்பிள்ளை... படிப்பிலும் நல்ல ஆர்வம், இசையிலும் நல்ல ஆர்வம்... ரொம்ப தங்கமான பிள்ளை... மியூசிக்கென்றால் அவருக்கு ரொம்ப விருப்பம்... எங்க வீட்டில்தான் எப்போதும் இருப்பார்... திருமணம் நல்லபடியா நடந்தது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எங்களையெல்லாம் அழைப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், எங்களையும் நினைவில் வைத்து அவர் திருமணத்திற்கு அழைத்துள்ளார் என்றனர்.   

‘எங்களை கூப்பிடுவார்ன்னு நினைக்கல்ல... விக்னேஷ் எங்க வீட்டுப்பிள்ளை..’ - ஆசிரியர்கள் நெகிழ்ச்சி | Nayanthara Vignesh Shivan Wedding