நயன்தாரா கணவர் சிம்பு டி.ஆர். - வைரலாகும் விக்கிபீடியா பதிவு - ஷாக்கான ரசிகர்கள்

Silambarasan Nayanthara Vignesh Shivan
By Nandhini Jun 09, 2022 12:09 PM GMT
Report
140 Shares

விக்கிபீடியாவில் நயன்தாராவின் கணவர் சிலம்பரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இதைப் பார்த்த ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

நயன்தாரா - விக்னேஷ்

சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாரா கணவர் சிம்பு டி.ஆர். - வைரலாகும் விக்கிபீடியா பதிவு - ஷாக்கான ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan Marriage

நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

பிரபலங்கள் பங்கேற்பு

இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

வைரலாகும் புகைப்படம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாரா கணவர் சிம்பு டி.ஆர். - வைரலாகும் விக்கிபீடியா பதிவு - ஷாக்கான ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan Marriage

விக்கிபீடியா பதிவு

இந்நிலையில், விக்கிபீடியா பக்கத்தில் நயன்தாராவின் கணவர் என்கிற இடத்தில் சிலம்பரசன் டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிம்புவும், நயன்தாராவும் காதலித்தது உண்மைதான். அதன் பிறகு இருவரும் பிரிந்து தற்போது வரை நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

தற்போது இந்த விக்கிபீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களுக்கு கோபமும், எரிச்சலும் வரவழைத்துள்ளது. ஏன்... இப்படி... இன்று நயன்தாராவின் திருமணம், மகிழ்ச்சியாக இருக்கும் இந்த சமயத்தில் யாரோ இப்படி ஒரு காரியம் செய்து மிகவும் தவறு என்று ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.