முடிதிருத்தும் நிலையத்திலும் சாதிய பாகுபாடா ? நீதிபதிகள் வேதனை

hairdressing pudukkotaai communitieissue maduraicourt
By Irumporai Feb 09, 2022 08:29 AM GMT
Report

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனௌவில் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், 1 சலவை நிலையமும் உள்ளது.

முடிதிருத்தும் நிலையத்திலும் சாதிய பாகுபாடா ? நீதிபதிகள் வேதனை | Hairdressing Communities Pudukkottai Madurai Court

ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை.

ஆகவே  ,  முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யோகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.