ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த ஜோடி - இது புதுசா இருக்கே!
ஜோடி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
கடலுக்கடியில் திருமணம்
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ- தீபிகா. இவர்கள் இருவரும் கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என எண்ணியுள்ளனர்.
எனவே ஆழ்கடலில் திருமணம் செய்யலாம் எனவும் முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர்.
என்ன காரணம்?
அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தொடர்ந்து தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து நிகழ்வை நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 5 பேர் அவர்களுடன் உடனிருந்தனர்.
இதுகுறித்து பேசிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், இது முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை.
முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.