ஒரு இடியாப்பத்தால் வாழ்க்கையே சிக்கலானது.. தம்பதிக்குள் தகராறு - கடைசியில் டுவிஸ்ட்!

Tamil nadu Chennai Madras High Court
By Vinothini Oct 17, 2023 11:30 AM GMT
Report

தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கோர்ட் வரை சென்றுள்ளது.

2ம் திருமணம்

சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார் இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் இது 2-ம் திருமணம். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கள் உள்ளவர், இவர் ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

couple-fight-for-idiyappam-leads-to-20-lakhs-fine

ஆனால் வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. எனவே இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியுள்ளார். இதனால் அவர் மனைவியை அடித்து தாக்கியுள்ளார். வனிதா போலீசில் புகாரளித்தார், விசாரணையின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே தான் துன்பங்களை அனுபவித்து வருவதாக வனிதா கூறினார்.

காதல் திருமணம்.. வெறும் 6 மாதத்தில் மனைவி செய்த காரியம் - கணவருக்கு விழுந்த வெட்டு!

காதல் திருமணம்.. வெறும் 6 மாதத்தில் மனைவி செய்த காரியம் - கணவருக்கு விழுந்த வெட்டு!

தகராறு

இந்நிலையில், வீட்டில் தொடர்ந்து பிரச்சனையை உருவாக்கியதால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த 2018-ல் தான் ஆசையாய் அவரது பிறந்தநாளுக்கு 'காப்பி கப்' வாங்கி கொடுத்ததை சிகரெட் சாம்பல் கொட்டும் குவளையாக பயன்படுத்தி எனது உணர்வுகளை புண்படுத்தினார் என்று மனைவி கூறியுள்ளார். இதனை மறுத்த கணவர் "தனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது.

couple-fight-for-idiyappam-leads-to-20-lakhs-fine

இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக கூறினார். மேலும் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக" கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை அபகரிக்க போட்டிருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

நீதிபதி அனிதா ஆனந்த் "எதிர்மனு தாரரான வேணுவிடம் எதுவும் இல்லாத நிலையில் மனுதாரர் சொத்துக்களை எப்படி அபகரிக்க முடியும்? எதிர்மனுதாரர் தனது பொருளாதார நிலைமையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து உணர்வு ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியது தெளிவாகிறது" என்று கூறி வனிதாவுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டார்.